திகா - திலகர் கருத்துமோதல்? கட்சி பிளவுப்படும் பேராபத்து!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜாவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது முதல் தொழிலாளர் தேசிய சங்கத்தினுள் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளன.

திகா - திலகர் கருத்துமோதல்? கட்சி பிளவுப்படும் பேராபத்து!

தொழிலாளர் தேசிய சங்கத்துக்குள் உட்கட்சிப் பூசல்கள் அதிகரித்துள்ளதாகவும் கட்சியினுள் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் குழுவொன்று செயற்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜாவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது முதல் தொழிலாளர் தேசிய சங்கத்தினுள் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு நிகராக தொ.தே.சங்கத்தையும் தொழிலாளர் தேசிய முன்னணியையும் கட்டமைத்ததில் பெரும் பங்கு அதன் பொதுச் செயலாளர் திலகராஜாவும் உள்ளது.

அவர் தொடர்பில் கடந்த சில நாட்களாக தலைமைத்துவத்துக்கு அதிருப்தியான கருத்துகள் கொண்டுசேர்க்கப்பட்டு தலைமைத்துவத்தை குழப்பமடைய செய்யும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

மலையகத்தில் பலமான ஒரு கட்சியாக தொழிலாளர் தேசிய சங்கம் மாறிவரும் பின்புலத்தில் கட்சியினுள் பிளவுகள் ஏற்பட்டால் அது எதிர்வரும் தேர்தலில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமென புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தினுள் பிளவுகள் ஏற்படும் பட்சத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மீண்டும் மலையகத்தில் அசைக்க முடியாத சக்தியாக மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0