தரவளை கொலனி பகுதியில் எடுக்கப்பட்ட நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு

டிக்கோயா தரவளை கொலனி பகுதியில் வசிக்கும் மக்கள் தாம் அருந்தும் நீரில் பிரச்சினைகள் இருப்பதாக சந்தேகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

தரவளை கொலனி பகுதியில் எடுக்கப்பட்ட நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட டிக்கோயா தரவளை கொலனி பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பாதிப்புக்கள் தொடர்பில் நேர்வூட் பிரதேசசபை அதிக கவனம் செலுத்தியிருப்பதாக பிரதேசசபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அப்பிரதேசத்திலிருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரி பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

டிக்கோயா தரவளை கொலனி பகுதியில் வசிக்கும் மக்கள் தாம் அருந்தும் நீரில் பிரச்சினைகள் இருப்பதாக சந்தேகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் இன்வெறி, ஹெட்லிக் ஆகிய இரு பிரதேசங்களிலிருந்தே இப்பிரதேச மக்கள் அருந்துவதற்கு நீரைப் பெற்றுக்கொள்வதாகக் கூறிய அவர், இந்த நீர் மாதிரிகள் பரிசோதனைக்காக கண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

நீரில் மிருகக் கழிவுகள் கலந்திருக்குமா என பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் சந்தேகிப்பதாகவும், நீர் மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இன்று(08) கிடைக்குமெனவும் இதன்பின்னரே உறுதியானத் தகவல்களை வழங்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0