நிவாரண விண்ணப்பம் 25 ரூபாவுக்கு விற்பனை!

கொவிட் – 19 நிவாரணத் திட்டத்தின் கீழ் 5000 ரூபா நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்பப் பத்திரமொன்று இருபத்தைந்து ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அவ்வாறு விற்பனை

நிவாரண  விண்ணப்பம் 25 ரூபாவுக்கு விற்பனை!

கொவிட் – 19 நிவாரணத் திட்டத்தின் கீழ் 5000 ரூபா நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்பப் பத்திரமொன்று இருபத்தைந்து ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அவ்வாறு விற்பனை செய்யப்படுகின்ற விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்த போதிலும் ஐயாயிரம் ரூபா நிதியுதவி தமக்கு கிடைக்கவில்லையென்றும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹப்புத்தளைப் பகுதியின் கஹகொல்ல பெருந்தோட்டப் பிரிவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்தும் அத்தோட்ட மக்கள் ஏகோபித்த வகையில் கருத்து தெரிவிக்கையில் ‘ஐயாயிரம் ரூபா நிதியுதவி கஹகொல்ல பெருந்தோட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்தும் நாம் ஏமாற்றப்பட்டு வருகின்றோம்.

குறிப்பிட்ட ஒருசிலருக்கு மாத்திரம் ஐயாயிரம் ரூபா நிவாரண நிதி கிடைக்கப்பெற்ற போதிலும் தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சிகளின் அடிப்படையிலேயே அவையும் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆகவே பாகுபாடின்றியும் பாரபட்சங்கள் இன்றியும் பாதிக்கப்பட்டிருக்கும் எமக்கும் இந்த ஐயாயிரம் ரூபா நிவாரண நிதி வழங்கப்படுதல் வேண்டும்” என்றனர்.

- பதுளை செல்வராஜா

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0