சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தம்பத்தேன தோட்ட தேயிலை மலையில் நேற்று உயிருக்கு போராடிய நிலையில்

சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தம்பத்தேன தோட்ட தேயிலை மலையில் நேற்று உயிருக்கு போராடிய நிலையில் மரத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுத்தை புலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ரந்தெனிகல் மிருக வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்தார்.

20 அடி உயரத்தில் மர உச்சியிலிருந்த சிறுத்தையை மயக்க ஊரி ஏற்றி உயிருடன் பிடித்து இரந்தெனிகல மிருக வைத்தியசாலையில் சிகிச்சையளித்த போதே உயிரிழந்ததுள்ளது.

மிருக வேட்டைக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்குண்ட சிறுத்தை புலியானது இடுப்பு பகுதியில் காயம் ஏற்ட்ட நிலையிலேயே வலையிலிருந்து மீண்டு மரத்தில் ஏறியுள்ளது.

சுமார் எட்டு மணித்தியாலம் கடும் பிரயத்தணத்தின் பின்னர் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள், மஸ்கெலியா பொலிஸ், இராணுவத்தினரும் இணைந்து உயிருடன் பிடிக்கப்ட்ட சிறுத்தையின் சிறுநீரகம் பாதிப்டைந்த நிலையிலே உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0