ஹட்டன்- கொழும்பு வீதியின் போக்குவரத்து வழமைக்கு

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன்- கொழும்பு வீதியின் போக்குவரத்து வழமைக்கு

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையால், ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை மற்றும் தியகல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.

இதனால், வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் நேற்று (19) முற்றாக செயலிழந்தன.

எனினும் குறித்த வீதியில் விழுந்துள்ள மண்மேடு, கற்கள் என்பவற்றை வீதி அபிவிருத்தி அதிகார சபை,இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து அகற்றியுள்ளனர்.

இதனையடுத்து, ஒரு வழிப்போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

like
1
dislike
1
love
0
funny
0
angry
1
sad
0
wow
0