டிக்கோயா தரவளையில் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு காய்ச்சல், வயிற்றோட்டம்

டிக்கோயா தரவளை கொளனி பகுதியில் 160 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் குறித்த பகுதிக்கு சிங்கமலை வனப் பகுதியில் இருந்து குடிநீர் வழங்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

டிக்கோயா தரவளையில் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு காய்ச்சல், வயிற்றோட்டம்

நோர்வுட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா தரவளை பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் முதியோர்களென நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி மற்றும் தலைச் சுற்றால் பாதிக்கப்பட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் மருந்து எடுத்துள்ளதாக அம்பகமு பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் காமதேவன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இந்த நோய் ஏற்பட்டமைக்கான காரணம் குறித்த பகுதியில் மக்கள் கூறியதாவது, பருகும் குடி நீர் மாசடைந்துள்ளமையாக இருக்கலாம் கூறியதுடனும், வைத்தியர்களும் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர் .

டிக்கோயா தரவளை கொளனி பகுதியில் 160 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் குறித்த பகுதிக்கு சிங்கமலை வனப் பகுதியில் இருந்து குடிநீர் வழங்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகைதந்த அம்பகமுவ பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் காமதேவன் தலைமையிலான குழு குறித்த பகுதியில் உள்ள நீர் தாங்கியினை சுத்தம் செய்து நீர் தாங்கிக்கு குளோரின் இடவும் நடவடிக்கையெடுத்தது.

நீரின் மாதிரி பரிசோதனைக்காக கண்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் இதன்போது தெரிவித்தனர்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0