மணிக்கவத்தையில் 7 வீடுகள் தீக்கிரை

ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் இருக்கையில் திடீர் தீபரவல் ஏற்பட்ட நிலையில், பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.

மணிக்கவத்தையில் 7 வீடுகள் தீக்கிரை
மணிக்கவத்தையில் 7 வீடுகள் தீக்கிரை
மணிக்கவத்தையில் 7 வீடுகள் தீக்கிரை
மணிக்கவத்தையில் 7 வீடுகள் தீக்கிரை


ஹட்டன், டிக்கோயா, மணிக்கவத்தை 3ஆம் பிரிவு தோட்டத்தில் 20 வீடுகளைக்கொண்ட குடியிருப்பில் இன்று மதியம் 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின.

இதனால் 89துக்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகியுள்ளதுடன், இவர்களைச சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உரிய இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் இருக்கையில் திடீர் தீபரவல் ஏற்பட்ட நிலையில், பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.

தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன.

வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியபபடவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

-கிரிஷாந்தன்

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0