லொய்னோன் தோட்டத்தில் குளவி கொட்டால் 14 தொழிலாளர்கள் பாதிப்பு

மரம் ஒன்றில் இருந்து குளவிக்கூடு கலைந்து கீழே விழுந்தமையினால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லொய்னோன் தோட்டத்தில் குளவி கொட்டால் 14 தொழிலாளர்கள் பாதிப்பு

பொகவந்தலாவை, லொய்னோன் தோட்ட பகுதியில் உள்ள 05ஆம் இலக்க தேயிலை மலையில் தொழில் புரிந்து கொண்டிருந்த 14 ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் 11 மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் கூறினர்.

மரம் ஒன்றில் இருந்து குளவிக்கூடு கலைந்து கீழே விழுந்தமையினால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காயங்களுக்கு உள்ளான 14 தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0