1000 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள்

கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமை காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தில்  பாதிக்கப்பட்ட தோட்ட, கிராம மக்களுக்கு போதுமான நிவாரணங்கள் இதுவரை கிடைக்கவில்லை. 

1000 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள்

இரத்தினபுரி லெல்லுபிட்டிய கோணகும்புற ஸ்ரீ விமலகீர்த்தியாம விகாரையின் விகாராதிபதியும் தேசிய சிறுவர் கல்வி, பொதுச்சேவை அமைப்பின் பணிப்பாளருமான களனியே கஸ்ஸப்ப தேரர்,  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 1,000 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கினார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் லெல்லுபிட்டிய தோட்டம், ஹெச்பீல்ட் தோட்டம் அதனை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த 1,000 குடும்பங்களுக்கு, 11 இலட்சம் ரூபாய் செலவில் சிங்கப்பூர் மக்களின் நிதியுதவியுடன் அரிசி உள்ளிட்ட உலர் உணவு பொருள்களை வழங்கினார்.

கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமை காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தில்  பாதிக்கப்பட்ட தோட்ட, கிராம மக்களுக்கு போதுமான நிவாரணங்கள் இதுவரை கிடைக்கவில்லை. 

இந்நிலையில் இவரது இந்த உதவியானது, தமக்கு பெறும் உதவியாக இருப்பதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0