லக்சபான விபத்தில் நோயாளியும் சாரதியும் காயம்

லக்சபான தோட்டத்திலிருந்து மஸ்கெலியா வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை அழைத்து வரும்போது, வீதியை விட்டு விலகிய ஓட்டோ பள்ளத்தில் விழுந்தமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லக்சபான விபத்தில் நோயாளியும் சாரதியும் காயம்

நல்லதண்ணி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்டத்திலிருந்து சுகவீனமுற்ற ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில், இரண்டு பேர்​ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து, நேற்று (08) நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

லக்சபான தோட்டத்திலிருந்து மஸ்கெலியா வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை அழைத்து வரும்போது, வீதியை விட்டு விலகிய ஓட்டோ பள்ளத்தில் விழுந்தமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஓட்டோ சாரதியும்  நோயாளியுமே காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0