மலையக தியாகிகள் தினம் பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிப்பு

மஸ்கெலியா பஸ்தரிப்பிடத்துக்கு அருகாமையில் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகள் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளன.

மலையக தியாகிகள் தினம் பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிப்பு

மலையக தியாகிகள் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் இடம்பெறும் என மலையக சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன.

மஸ்கெலியா பஸ்தரிப்பிடத்துக்கு அருகாமையில் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகள் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளன.

மலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் ஆரம்பமாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் ஆரம்பமாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் உயிர் துறந்த ஜனவரி 10 ஆம் திகதியை, மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிப்பதற்குக் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி தலவாக்கலை, டெவோனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0