மோட்டார் சைக்கிள் மதிலில் மோதி ஹட்டனில் இளைஞன் பலி

ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக்கொண்டிருக்கையில், அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கடவையில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் மதிலில் மோதி ஹட்டனில் இளைஞன் பலி

ஹட்டன், டன்பார் பகுதியில் இன்று (24) பகல்  இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.

ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக்கொண்டிருக்கையில், அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கடவையில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

டன்பார் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய புத்திக பிரசாத் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

What's Your Reaction?

like
0
dislike
1
love
2
funny
0
angry
0
sad
0
wow
0