பிரதேச சபைத் தலைவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் 

கண்டன ஊர்வலத்தின் பின் ஹல்துமுள்ளை பிரதேச சபை அமர்வு, சபைத் தலைவர் உபுல் ஹெட்டிகே தலைமையில் இடம்பெற்றது. 

பிரதேச சபைத் தலைவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் 

(பதுளை செல்வராஜா)


ஹல்துமுள்ளை பிரதேச சபைத் தலைவர், அரச நிவாரணப் பொருட்கள் வழங்கலில் முறைகேடாக நடந்துள்ளமையைக் கண்டித்தும் சபையின் ஊழல்களை எதிர்த்தும் சபையின் சில உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்தும், கண்டன பதாதைகளை தாங்கிய வண்ணமும், ஹல்துமுள்ளையில் ஊர்வலமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

செமன்டின் மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவிக்கின்றனர்.

மேற்படி கண்டன ஊர்வலத்தின் பின் ஹல்துமுள்ளை பிரதேச சபை அமர்வு, சபைத் தலைவர் உபுல் ஹெட்டிகே தலைமையில் இடம்பெற்றது. 

அவ் வேளையிலும் சபை உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்த வகையிலும், எதிர்ப்பு பதாதைகளுடன் சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.

அதையடுத்து சபைத் தலைவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முன்வைக்கப்பட்டது. அப்பிரேரணை தீர்மானமாக்கப்பட்டு, வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

வாக்கெடுப்பில் சபைத் தலைவர் தோல்வி கண்டார். அத்துடன் சபை அமர்வு முடிவிற்கு கொண்டு வரப்பட்டு, சபைத் தலைவரை உடனடியாக மாற்றும் படி கோரி, ஊவா மாகாண ஆளுனர், உள்ளுராட்சி மன்ற ஆணையாளருக்கும் மகஜர்களை சமர்ப்பிக்கவும், சபையின் சகல கட்சிகளையும் இணைந்த வகையிலான ஊழல்களை எதிர்க்கும் சபை உறுப்பினர்கள் அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0