பன்வில ஆற்றங்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

பன்வில ஆற்றங்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

கண்டி – பன்வில – கெலாபொக்க தோட்டத்திலுள்ள ஆற்றங்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று (04) மாலை ஆற்றுக்கு குளிக்கச் சென்றிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளையை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் மீட்கப்பட்டு கண்டி வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பன்வில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0