பதுளை பஸ் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பம்

பலர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சிலர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொது வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதுளை பஸ் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பம்

பதுளை – பசறை, மடுல்சீமை பிரதான வீதியின் 6ஆம் கட்டைப்பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இந்த விபத்தில் 4 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பஸ்ஸின் சாரதியும் நடத்துனர் உள்ளிட்ட காயமடைந்த 40 இற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சிலர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொது வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதற்காக விசேட குழுவொன்றை உடனடியாக நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பசறை – மடூல்சீமை வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

விசேட பொறியியலாளர்கள் குழுவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0