பதுளை சரஸ்வதி கல்லூரியில் 59 பேர் பல்கலைக்குத் தெரிவு

வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுக்களின் அடிப்படையில், பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியானது, ஊவாமாகாணத்தின் தமிழ் மொழிப் பிரிவில் பெரும் சாதனை படைத்துள்ளது.

பதுளை சரஸ்வதி கல்லூரியில் 59 பேர் பல்கலைக்குத் தெரிவு

பதுளை சரஸ்வதி தேசியக் கல்லூரியின் 59 மாணவர்கள், பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கு தகுதிபெற்று சாதனை படைந்துள்ளனர்.

வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுக்களின் அடிப்படையில், பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியானது, ஊவாமாகாணத்தின் தமிழ் மொழிப் பிரிவில் பெரும் சாதனை படைத்துள்ளது.

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தேவேந்திரன் டிலாஞ்ஞனி 2 ஏ.சி. பெறுபேற்றையும், கணிதப் பிரிவில் சிவராஜா துஷானாபி-2 சிபெறுபேற்றையும், வணிகப் பிரிவில் பாஸ்கரன் ஹரிதரன் 2 ஏ-பிபெறுபேற்றையும், கலைப்பிரிவில் சிவகுமார் வனோஜா ஏ.பி.சி. பெறுபேற்றையும் பெற்றுள்ளனர்.

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 7 பேரும், கணிதப் பிரிவில் 5 பேரும், வணிகப் பிரிவில் 14 பேரும், கலைப்பிரிவில் 10 பேரும், உயிரியல் தொழில்நுட்பப் பிரிவில் 13 பேரும், பொறியியல் தொழிநுட்பப் பிரிவில் 10 பேரும் பல்கலைக்கழகதகைமையைப் பெறுள்ளனர்.

இதனடிப்படையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 59 பேர் பல்கலைக்கழக தகைமையைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கணித, உயிரியல் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் காணப்பட்டபட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் முகமாக மூன்று விஞ்ஞானபட்டதாரி ஆசிரியர்களை தொண்டர் அடிப்படையில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பழையமாணவர் சங்கக் கொழும்புகிளையும், ஊவா தமிழ் அறவாரியமும் நியமித்து வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெற்றுவருவதோடு 2020ஆம் ஆண்டிலிருந்து ஆங்கில மொழிமூலமான கணிதப் பிரிவுக்கான வகுப்புகளும் ஆரம்பிக்கப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் நிரந்தரபட்டதாரி ஆசிரியர்கள் இல்லாத நிலையிலும் மேற்படி பெறுபேற்றினை எமது கல்லூரி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வகையில், கல்லூரிக்கும் பெரும் சாதனையை ஏற்படுத்திய மாணவ,மாணவிகளை கல்லூரி முதல்வர் கே.திருலோகச் சங்கர் உள்ளிட்ட ஆசிரியகுழாமினர் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.

-பதுளைநிருபர்

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0