பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறு கோரிக்கை

பாதையின் ஒரு பக்கத்தில் பாதுகாப்பு வேலி இல்லாமையால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறு கோரிக்கை

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை பிரதான பாதையில் சாமிமலை நகருக்கு அருகில் ஒரு புறம் ஆபத்தான நிலையில் உள்ளதாக வாகன சாரதிகள் தெரிவித்தனர்.

மேலும் கூறுகையில், பாதையின் ஒரு பக்கத்தில் பாதுகாப்பு வேலி இல்லாமையால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டதுடன் கடந்த காலங்களில் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இப்பாதையானது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ளமையால் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு பாதுகாப்பு கம்பியை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0