பாதுகாப்பற்ற பஸ் நிலையத்தை பயன்படுத்திவரும் தோட்ட மக்கள்

இந்த பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டுமானால் மழைக்காலங்களில் குடையுடனே காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.இந்த பிரதேசத்தில் குடாஓயா வித்தியாலயம் காணப்படுகின்றது. 

பாதுகாப்பற்ற பஸ் நிலையத்தை பயன்படுத்திவரும் தோட்ட மக்கள்
பாதுகாப்பற்ற பஸ் நிலையத்தை பயன்படுத்திவரும் தோட்ட மக்கள்
பாதுகாப்பற்ற பஸ் நிலையத்தை பயன்படுத்திவரும் தோட்ட மக்கள்

கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட குடாஒயா பிரதேசத்தில் நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் பஸ்கள் நிறுத்துவதற்காக மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் அமைக்கப்பட்ட பஸ் நிலையமே இது.

தற்போது இந்த பஸ் நிலையம் உடைவடைந்து கூரைகள் இன்றி பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இதனைத் திருத்தி அமைப்பதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதும். இது வரை திருத்தி அமைக்கப்படவில்லை. 

இந்த பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டுமானால் மழைக்காலங்களில் குடையுடனே காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.இந்த பிரதேசத்தில் குடாஓயா வித்தியாலயம் காணப்படுகின்றது. 

இங்கு கல்வி கற்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் கிராம மக்களும் லபுக்கலை தோட்ட மக்களும் நாளாந்தம்  இந்த பஸ் நிலையத்தை பாயண்படுத்தி வருகின்றனர். 

இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையத்தை உடனடியாக திருத்தி அமைத்துக் கொடுக்க வேண்டியது மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கடமையாகும். இதனை உடனடியாக திருத்தி அமைத்துத் தருமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0