பசறையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழப்பு

பசறையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழப்பு

பசறை - மடுல்சீமை வீதியில்  06ஆம் கட்டை பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது, அந்தப் பகுதியில் கடும் மழையுடனான வானிலை காணப்படும் நிலையில், வீதியில் ஏற்பட்ட வழுக்கல் நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

செங்குத்தான பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட இந்த விபத்தினால் குறித்த பஸ் இரண்டாக உடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

like
0
dislike
0
love
1
funny
1
angry
0
sad
1
wow
0