நுவரெலியாவில் குளவி தாக்குதலுக்கு உள்ளான 42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியா நகரில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற குளவி தாக்குதலில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் 42 பேர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள் வீசிய பந்தொன்று அங்கிருந்த குளவிக்கூட்டில் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையில் காணப்படும் குளவிக்கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நுவரெலியா வனஜுவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0