தெரேசியா தோட்டத்தில் மாணிக்கக்கல் அகழ்ந்த  5 பேர் கைது 

பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தெரேசியா தோட்டத்தில் மாணிக்கக்கல் அகழ்ந்த  5 பேர் கைது 
தெரேசியா தோட்டத்தில் மாணிக்கக்கல் அகழ்ந்த  5 பேர் கைது 
தெரேசியா தோட்டத்தில் மாணிக்கக்கல் அகழ்ந்த  5 பேர் கைது 

காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் பொகவந்தலாவை தெரேசியா தோட்ட கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 5 பேரை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது சம்பவமானது நேற்று (05) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யபட்டவர்கள் பொகவந்தலாவை மற்றும் பலாங்கொடை பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0