தேயிலை மலைகளில் பாம்பு தொல்லை... அச்சத்தில் தொழிலாளர்கள்

உயிராபத்து அச்சத்துடன் தொழிலை முன்னெடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள தொழிலாளர்கள் தேயிலை மலையில் தொழிலாளர்களுக்கு காட்டு விளங்குகளால் ஏற்படும் அசம்பாதங்களுக்கு தோட்ட நிர்வாகம் பொறுப்பு கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தேயிலை மலைகளில் பாம்பு தொல்லை... அச்சத்தில் தொழிலாளர்கள்

நுவரெலியா  மாவட்டம் கந்தப்பளை  பார்க் தோட்டத்தில் தேயிலை மலைகளில் பாட்டு களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால்,  அத்தோட்ட தொழிலாளர்கள் தமது தேயிலை தொழிலை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் கொண்டுள்ளனர்.

இது குறித்து  மேலும் தெரியவருவதாவது, கந்தப்பளை  பார்க் தோட்டம் உடப்புஸ்சலாவை பெருந்தோட்ட  முகாமைத்துவ கம்பணியின்  கீழ் இயங்கி வரும் சிறந்த தேயிலை விளைச்சல்  தரக்கூடிய தோட்டமாகும்.

இந்த தோட்டத்தில் காட்டு விளங்குகளை பார்ப்பது அபூர்வமான விடயமாகும். இந்த நிலையில் தற்போது இத் தோட்டத்தின் தேயிலை மலைகளின் பராமரிப்பு விடயத்தில் தோட்ட நிர்வாகம் கவனம் செலுத்தாத நிலையில் பெரும்பாலான தேயிலை மலைகள் பற்றை காடுகளாகவும், தேயிலை மலைகளில் பலதரப்பட்ட புற்கள்  வளர்வதற்கே இடமளிக்கப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அண்மைய காலமாக அரங்கேறி வரும் இந்த  செயற்பாட்டினால் தேயிலை மலைகளுக்கு காட்டு விளக்குகளும், பாம்புகளுடன் படையெடுக்க ஆரம்பித்துள்ளன.

அதேநேரத்தில்,  இத்தோட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் காணப்படும் குப்பைகளை நாடி விலங்குகள்  படையெடுத்து வருகின்றது.

காட்டு விளக்குகளால் அண்மைக்காலமாக விவசாய நடவடிக்கைகளுக்கு பாரிய பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றதையும் அவதானிக்க  கூடியதாக இருக்கின்றது.

இந்த  நிலையில் கடந்த  வெள்ளிக்கிழமை  (03) அன்று இலக்கம் 4 தேயிலை மலையில் தொழில் செய்த பெண் தொழிலாளர்கள் மலைப்பாம்பு   ஒன்றை நேரில் கண்டு பதற்றம் அடைந்துள்ளதுடன் கூச்சலிட்டு ஆண்டு தொழிலாளர்களை வரவழைத்து பாம்பினை பிடித்துள்ளனர்.

இதனால் அச்சம் கொண்டுள்ள பெண் தொழிலாளர்கள் தேயிலை நினைக்கும் மேலும்  பாம்புகள் ஊடுருவி  இருக்கலாம் என்ற பயத்தில் தொழில் நடவடிக்கைகளை இடைநிறுத்தியும் உள்ளனர்.

இந்த  நிலையில் தோட்ட நிர்வாகம் தேயிலை நிலங்களை சுத்தம் செய்யும் அபிவிருத்தியை மேற்கொள்ள உடனடி நடவடிக்கையை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொழிலாளர்கள் தோட்ட நிர்வாக   அதிகாரியிடம் முன்வைத்துள்ளனர்.

உயிராபத்து அச்சத்துடன் தொழிலை முன்னெடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள தொழிலாளர்கள் தேயிலை மலையில் தொழிலாளர்களுக்கு காட்டு விளங்குகளால் ஏற்படும் அசம்பாதங்களுக்கு தோட்ட நிர்வாகம் பொறுப்பு கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே எதிர் காலத்தில் உயிர்  ஆபத்து களில் இருந்து பார்க் தோட்ட தொழிலாளார்களை காப்பாற்ற தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென தொழிற்சங்க தலைமை களுக்கு தோட்ட கமிட்டி களின் கவனத்திற்கு கொண்டு  வந்துள்ள தொழிலாளர்கள் பெருந்தோட்ட அமைச்சு மற்றும்  சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு  அமைசரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் சம்பளம் தொடர்பான   கூட்டு ஒப்பந்தம்   செய்து கொள்ளப்படும் போது அதன் சரத்துகளில் தேயிலை காணிகளை சுத்தம் செய்யும் நடவடிக்களில் தோட்ட நிர்வாகங்கள் செயற்பட வேண்டுமென ஒப்பந்தம் செய்யபபட்டுள்ளது என மலையக தலைமகள் கூறிவருக்கிறது.

எனினும், இது உதட்டளவிலான வார்த்தைகளா? என்ற கேள்வியை எழுப்பியுள்ள தொழிலாளர்கள் அப்படியென்றால் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்த சட்டவிகளை மீறி செயல்படுவதற்கு எதிராக ஏன் இதுவரை நடவடிக்கைகளை  தொழிற்சங்கங்கள் எடுக்க முன்வருவதில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே காலத்துக்கு காலம் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் தோட்டக்கம்பணிகள் தொழிலாளர்களின் இலாபம் ஈட்ட தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து தினமும் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த  நிலையில் உரிய தீர்வினை சம்பந்தப்பட்டவர்கள் பெற்று தர வேண்டும் என்று வழியூர்த்தும் தொழிலாளர்கள் பார்க் தோட்டத்தில் தேயிலை காணிகளை சுத்தம் செய்து கொடுக்க அத் தோட்ட நிர்வாகத்திற்கு தொழிற்சங்க அழுத்தம் கொடுக்க தொழிற்சங்களும் அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும்  எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மக்கள் குரல்

உங்கள் பிரதேசத்திலுள்ள பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர நாங்கள் தயார். விவரங்களை புகைப்படங்களுடன் அனுப்பிவையுங்கள். voice@colombotamil.lk

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0