தேயிலை ஏற்றுமதியில் முன்னேற்றம்

கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில், துருக்கிக்கே அதிகளவிலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தேயிலை ஏற்றுமதியில் முன்னேற்றம்

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இதன்போது 22 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 6 இலட்சம் கிலோகிராம் அதிகரிப்பாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில், துருக்கிக்கே அதிகளவிலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதனையடுத்து, ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அதிகளவான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0