தைப்பொங்கல் தினத்தன்று மலையக மக்களுக்கு நற்செய்தி

மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைத்தல், மதுபான கடைகளை அகற்றி வேறு இடங்களில் அமைத்தல், காடுகளாக உள்ள தோட்ட காணிகளை தோட்ட இளைஞர்களுக்கு பகிர்ந்தளித்தல், தோட்ட பாடசாலைக்கு தேவையான கணித, விஞ்ஞான ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொடுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினேன்.

தைப்பொங்கல் தினத்தன்று மலையக மக்களுக்கு நற்செய்தி

தைப்பொங்கல் தினத்தன்று மலையக மக்களின் சம்பள உயர்வு தொடர்பான நற்செய்தியொன்று அறிவிக்கப்படும் என அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.

கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற மகாத்மா காந்தியின் 150ஆவது நினைவுத்தினம் மற்றும் இந்திய வம்சாவழி மக்கள் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

அண்மையில் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்து பல விடயங்களை கலந்தாலோசித்தேன். 

மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைத்தல், மதுபான கடைகளை அகற்றி வேறு இடங்களில் அமைத்தல், காடுகளாக உள்ள தோட்ட காணிகளை தோட்ட இளைஞர்களுக்கு பகிர்ந்தளித்தல், தோட்ட பாடசாலைக்கு தேவையான கணித, விஞ்ஞான ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொடுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினேன்.

மேலும் பொங்கல் திருநாளில் நற்செய்தியொன்றை மலையக மக்களுக்கு தெரிவிப்பேன். ஜனாதிபதி எமக்கு நம்பிக்கையளித்துள்ளார். அவரின் இந்த நிர்வாகம் மற்ற அரசியல்வாதிகள் போலல்ல. அவர் சொன்னதை செய்வார்.

நாம் அவரை முழுமையாக நம்புகிறோம். கண்டி மாவட்ட காணிகளை A, B,C என பதிந்து வெளியாளர்களுக்கு கொடுப்பதை நிறுத்த வேண்டும் .அரச தோட்ட காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றார்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0