டயகமவில் மரத்திலிருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

வீட்டு தேவைக்கு விறகு வெட்டுவதற்காக 150 அடி உயரத்தில் உள்ள மரத்தில்  ஏறி மரத்தின் கிளைகளை வெட்டும் போது  குறித்த நபர் கால் தவறி விழுந்துள்ளார்.

டயகமவில் மரத்திலிருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் 5 பிரிவு தோட்டத்தில் மரத்திலிருந்து தவறி விழுந்ததில்  குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (05) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டு தேவைக்கு விறகு வெட்டுவதற்காக 150 அடி உயரத்தில் உள்ள மரத்தில்  ஏறி மரத்தின் கிளைகளை வெட்டும் போது  குறித்த நபர் கால் தவறி விழுந்துள்ளார்.

48 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான ராமன்  பாலசுப்பிரமணியம் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்  தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும்  தன்னுடன் அழைத்துச்சென்றுள்ளார். 

இவர்களை  மரத்தின்  அடிவாரத்தில் நிறுத்திவைத்து விட்டு  மரத்தில் ஏறி கிளையை வெட்டிய சில நிமிடங்களில்  கீழே விழுந்துள்ளதாக தெரியவருகின்றது.

இறந்தவரின் சடலம்  டயகம வைத்தியசாலையில்  வைக்கப்பட்டு  பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0