சிதைக்கப்பட்ட நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு
சிறுத்தையின் உடல் முழுவதும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் சரணாலயத்தின் விலங்குகளைக் கொன்று அவற்றின் உடற்பாகங்களை அபகரித்து வரும் விசமிகளின் நாசகரச் செயலாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

உடவளவ சரணாலயத்திலுள்ள நீரோடைன்றுக்குள் இருந்து, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன், சிறுத்தையின் சடலத்தை, விசேட அதிரடிப்படையினர் இன்று (5) காலை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தையின் உடலத்தில், கால் நகங்கள், பற்கள் என்பவை அகற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தையின் உடல் முழுவதும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் சரணாலயத்தின் விலங்குகளைக் கொன்று அவற்றின் உடற்பாகங்களை அபகரித்து வரும் விசமிகளின் நாசகரச் செயலாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில், விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வனவளத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.