கண்டியில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட அறுவர் கைது

போதைப் பொருள்பாவனை உள்ளிட்ட குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைகளுக்கு முன்னிலையாகாத அறுவருக்கு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்தது.

கண்டியில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட அறுவர் கைது

கண்டி கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்,  பொலிஸார் நேற்று (23) இரவு முதல் இன்று (24) காலை வரை மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, பிடிவிறாந்து பிற்பிக்கப்பட்டிருந்த அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள்பாவனை உள்ளிட்ட குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைகளுக்கு முன்னிலையாகாத அறுவருக்கு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்தது.

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, மேற்படி அறுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எம்.எஸ்.உவிந்தசிறியின் ஆலோசனைக்கு அமைவாக விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0