"குட்டிக் கோமாளியான ஜீவன் தொண்டமான் ,  கொக்கரிப்பதற்கு முன்னர், தனது விவரங்களை உடன் வெளியிட வேண்டும்."

குட்டிக்  கோமாளியான ஜீவன்  தொண்டமான் , கண்டி மாவட்டம் தொடர்பில் கொக்கரிப்பதற்கு முன்னர், தனது பிறப்பிடம் எது, தான் எங்கு கல்வி பயின்றார் போன்ற விபரங்களை உடன் வெளியிட வேண்டும்

"குட்டிக் கோமாளியான ஜீவன் தொண்டமான் ,  கொக்கரிப்பதற்கு முன்னர், தனது விவரங்களை உடன் வெளியிட வேண்டும்."

"குட்டிக்  கோமாளியான ஜீவன்  தொண்டமான் , கண்டி மாவட்டம் தொடர்பில் கொக்கரிப்பதற்கு முன்னர், தனது பிறப்பிடம் எது, தான் எங்கு கல்வி பயின்றார் போன்ற விபரங்களை உடன் வெளியிட வேண்டும்."  - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் உடபளாத்த பிரதேச சபை உறுப்பினர் கே. கனகரட்னம் சவால் விடுத்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் அபிவிருத்திகள் நடக்கவில்லை என்றும், தமிழ் முற்போக்கு கூட்டணி தனது இயலாமையை மூடிமறைக்கவே இ.தொ.காவை விமர்சிக்கின்றது என்றும் ஜீவன் தொண்டமானால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனகரட்னத்தால் இன்று (10) விடுக்கப்பட்டுள்ள  ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

"தாத்தா அன்று சுட்ட  'புஷ்'  வடையை வைத்துக்கொண்டு இன்றளவிலும்   அரசியல் நடத்தும்  இ.தொ.காவுக்கு இனியும் எதிர்காலம் இல்லை என்பதை அறிந்துவைத்துள்ளதாலேயே, நாய் மரணிப்பதற்கு முன்னர் அதன் உடம்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் உண்ணிகள் ஒப்பாரிவைப்பதுபோல் ஜீவன் தொண்டமான் போன்றோர் ஊளையிட ஆரம்பித்துள்ளனர்.

தொழிலாளர்களின் சந்தாப்பணத்தில் பந்தாக்காட்டும் ஜீவன் தொண்டமானுக்கு கண்டி மாவட்டத்தில் எத்தனை தோட்டங்கள் உள்ளன என்று தெரியுமா? சரி தெரியாவிட்டாலும் பரவாயில்லை.
சுடலை ஞானம் பிறந்ததுபோல் இன்றாவது அவர் கண்டி மாவட்டம் பற்றி கதைப்பது மகிழ்ச்சியே.

கண்டி மாவட்டத்தில் அபிவிருத்திகள் நடக்கவில்லையாம்.ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதைபோல் கவலைப்படும் ஜீவன் தொண்டமானுக்கு,தனது தாத்தாயும், தந்தையும் அமைச்சர்களாக இருந்தபோது கண்டி மாவட்டத்துக்கு என்ன செய்தார்கள் என்பது தெரியுமா? அவ்வாறு தெரிந்தால் அவற்றையும் பட்டியலிடுமாறு சவால் விடுக்கின்றேன்.

இவற்றுக்கு எல்லாம் முதல், தான் எங்கு பிறந்தார், ஆரம்பக்கல்வியை எங்கு பயின்றார் போன்ற விபரங்களையும் ஜீவன் தொண்டமான் அறிவித்தால் சிறப்பாக இருக்கும்.

ஏனெனில் அன்று முதல் இன்று வரை பதவிக்காகவே தொண்டமான்கள் கடல் தாண்டி இலங்கை வருகின்றனர். இங்கு வந்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப்பெற்று வயிறு வளர்ப்பதே அவர்களின் அரசியல் கொள்கையாகும். இன்று மக்கள் விழித்துக்கொண்டுள்ளனர். அவர்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.
 
ஆயிரம் ரூபாவை  பெற்றுக்கொடுத்துவிட்டோம் என மார்தட்டும் ஜீவன் தொண்டமான், இந்த ஆயிரத்தை காட்டி மலையகத் தமிழர்களின் ஆயிரம் பிரச்சினைகளை மூடிமறைக்க எத்தனிப்பது அரசியலில் எந்த டிசைனை சாரும்?

அதுமட்டுமல்ல தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் தலையீட்டை ஏற்படுத்துவதற்கு களம் அமைத்துக்கொடுத்ததே  தமிழ் முற்போக்கு கூட்டணிதான் என்பது ஜீவனின் ஆறாம் அறிவுக்கு எட்டாதது ஏனோ?

கூட்டு ஒப்பந்தம் ஊடாக தோட்டத் தொழிலாளர்களை முதலாளிகளிடம் அடகுவைக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிஸின் மறுபக்கம் தொடர்பான கோவைகளையும் ஜீவன் தூசுதட்டி பார்க்கவேண்டும்.

90 காலப்பகுதியில் இருந்து கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றது. எனவே, நியாயமான சம்பளம் கிடைத்திருந்தால் இந்நேரம் ஆயிரம் ரூபாவை தாண்டியிருக்கும். ஆகவே,  யாருக்கு முதுகெலும்பிள்ளை, இயலாமையை மூடிமறைக்க யார் எத்தனிப்பது போன்ற கேள்விகளுக்கு தனது மனசாட்சியிடம் பதில்களை கோருமாறு
ஜீவனுக்கு கூறிவைக்கின்றோம்." - என்றுள்ளது.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0