இரத்தினபுரி மாவட்டத்தில்122 பேர் பாதிப்பு

பலாங்கொடை, பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நான்கு முகாம்களும் அயகம, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒரு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

இரத்தினபுரி மாவட்டத்தில்122 பேர் பாதிப்பு

மழை வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம், கடுங்காற்று காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர், ஆறு இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனி லொக்குபோதாகம தெரிவித்தார்.

பலாங்கொடை, பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நான்கு முகாம்களும் அயகம, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒரு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

மேற்படி மாவட்டத்தில், 19 ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக, 5,124 குடும்பங்களைச் சேர்ந்த 19,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

அனர்த்தங்களால், மூவர் மரணமடைந்துள்ளதுடன், 1,954 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0