'ஆணைக்குழு மீது அரசாங்கம் பழி சுமத்துகிறது’

கொவிட்-19 நெருக்கடியின் பின்னர், சுகாதார துறையினரும், பாதுகாப்பு தரப்புகளும் சிறப்பாக செயற்பட்டதால், பாரிய பாதிப்பில் இருந்து நாடு மீட்கப்பட்டுள்ளது என்றும் ஆனால், இந்த விடயத்திலும் அரசாங்கம் தற்போது பெயர்போட்டுக்கொள்வதற்கு முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

'ஆணைக்குழு மீது அரசாங்கம் பழி சுமத்துகிறது’

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை நிறுத்தி, ஏழைகளின் மக்களின் அடிவயிற்றில் அடித்துள்ள ராஜபக்ஷ அரசாங்கம்,தேர்தல்கள் ஆணைக்குழுமீது  அப்பட்டமாக பழிசுமத்திவிட்டு தப்பிக்கொள்வதற்கு முயல்வதாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக, இன்று (24) விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நெருக்கடியான சூழ்நிலையில்கூடு கபட அரசியல் நடத்தும் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் தக்கபாடம் புகட்டவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நெருக்கடியின் பின்னர், சுகாதார துறையினரும், பாதுகாப்பு தரப்புகளும் சிறப்பாக செயற்பட்டதால், பாரிய பாதிப்பில் இருந்து நாடு மீட்கப்பட்டுள்ளது என்றும் ஆனால், இந்த விடயத்திலும் அரசாங்கம் தற்போது பெயர்போட்டுக்கொள்வதற்கு முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வறுமை கோட்டுக்கு கீழ்வாழும் மக்கள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்தினரும் கொவிட் -19 நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்றும் அவர்களில் பலருக்கு 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இவை, கட்சி சார்பாக பகிர்ந்தளிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ள அவர், மலையகத்தில் இந்நிலைமை மிகவும் மோசமாக இருந்தது என்றும் இதற்கு எதிராக  குரல் கொடுத்ததாலேயே ஓரளவு நியாயம் கிடைத்தது என்றும் கூறியுள்ளார்.

ஆனால், ஜுன் மாதத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கமையவே நிறுத்தப்பட்டுள்ளது என அரசாங்கம் புது விளக்கம் வழங்கிவருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0