அடுத்தடுத்து சோகம்... லிந்துலையில் 12 வயது சிறுவன் தற்கொலை
சிறுவன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், எவ்வித சத்தமும் இல்லாது இருந்துள்ளது.

லிந்துலை திஸ்பனை பகுதியில் இன்று (08) காலை 12 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், எவ்வித சத்தமும் இல்லாது இருந்துள்ளது.
இதனையடுத்து, வீட்டினுள் பார்த்த போது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.