அக்கரபத்தனை உப தபாலகத்துக்கு நிரந்தரக் கட்டடம் வேண்டும்

தற்காலிக வாடகைக் கட்டடம் ஒன்றிலேயே இந்த உப தபாலகம் இயங்கி வருகின்ற நிலையில், தற்போது வாடகை காலம் முடிவடைந்துள்ளமையாமல், தபாலகத்தை வேறொரு இடத்துக்கு மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அக்கரபத்தனை உப தபாலகத்துக்கு நிரந்தரக் கட்டடம் வேண்டும்

அக்கரபத்தனை பிரதான நகரில் இயங்கிவரும் உப தபாலகத்துக்கு நிரந்தரமான கட்டடம் ஒன்று இன்மையால், பொதுமக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அக்கரபத்தனை பிரதேசத்திலுள்ள 45 பெருந்தோட்டங்களில் உள்ள 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர், இந்த உப தபாலகத்தையே பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அதில் முதியோர் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக, தபாலகத்துக்கு வருகை தரும் முதியவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த உப தபாலகத்தில் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு இடப்பற்றாக்குறை காணப்படுவதாகவும் முதியர்கள் ஒதுங்கி நிற்பதற்குக் கூட இடவசதிகள் காணப்படா​​மையாமல், தபாலகத்தின் வாசலிலேயே காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்காலிக வாடகைக் கட்டடம் ஒன்றிலேயே இந்த உப தபாலகம் இயங்கி வருகின்ற நிலையில், தற்போது வாடகை காலம் முடிவடைந்துள்ளமையாமல், தபாலகத்தை வேறொரு இடத்துக்கு மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு கடந்த காலம் முதல், இந்தத் தபாலகம் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும் எனவே, இதற்கு நிரந்தரக் கட்டடமொன்றைப் பெற்றுக்கொடுக்க  வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0